வேப்ப விதைகள் கரைசல் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
வேப்ப விதைகள் கரைசல் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அலங்காநல்லூர்,ஏப்
அலங்காநல்லூர் அருகே செம்புக்குடிப்பட்டியை சேர்ந்த விவசாயிகளிடம் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் நிவிதா, பத்மபிரியா, பிரேமா, பிரியதர்சினி, ரம்யா கிருஷ்ணா, ரவீணா ஆகியோர் வேப்பம் விதைகளால் கரைசல் தயாரிப்பது குறித்து விளக்கினர். 5 கிலோ வேப்பம் விதைகளை தூளாக்கி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 12 மணி நேரம் நன்றாக ஊறிய பின், அதை முறையாக 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து வடிகட்டி, பயன்படுத்தலாம். இந்த முறையில் வேப்ப விதைகளின் கரைசல் தயாரிக்கலாம். இதை தெளிப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்கத்திலிருந்து பயிர்களைக் காக்க முடியும். வேம்பின் கசப்பு வாசனை பூச்சிகளை அண்டவிடாது. பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களும் கட்டுப்படுத்தப்படுகிறது. வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும். இது இயற்கை முறையை சார்ந்தது என்று மாணவிகள் கூறினர்.
Related Tags :
Next Story