முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்கியுள்ளார் - அ.தி.மு.க. வேட்பாளராக தாமோதரன் பேச்சு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்கியுள்ளார் என அ.தி.மு.க. வேட்பாளராக தாமோதரன் பேசினார்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக செ.தாமோதரன் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வேட்பாளர் செ.தாமோதரன். தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று கோவை அருகே கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சி பகுதியில் தண்ணீர் பந்தல், சித்திரை வாய்க்கால் மேடு, மேற்கு இந்திரா காலனி, எம்ஜிஆர் பூங்கா மைதானம் ,அண்ணா நகர் ,மாரியம்மன் கோவில் வீதி, அம்பேத்கர் காலனி , செ.க.புதூர்.ஏ.டி காலனி, முனியப்பன்கோவில், லீனாநகர், தீத்திபாளையம் ஊராட்சி பகுதியில் ஏடிகாலனி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிபகுதியில் காந்திகாலனி ,விநாயகர் கோவில் ,மாரியம்மன்கோவில்,ஏடிகாலனி,இந்திரா நகர் சவ்தைபேட்டை , போஸ்டல்காலனி,குறிஞ்சிநகர், ஆறுமுககவுண்டனூர். ஆகிய கிராம பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அங்கு வேட்பாளர் செ.தாமோதரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் செ. தாமோதரன் பேசியதாவது:-
நான் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்கடந்த 5ஆண்டுகாலம் இங்கே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன்.மீட்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் மேலும் பல நல்ல திட்டங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்கியுள்ளார் .மீண்டும் அவர் ஆட்சி பொறுப்பில் இருந்தால் தான் நமது தமிழகத்திற்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் .ஏனென்றால் அவர் ஒரு விவசாயி ஒரு விவசாயிக்கு ஏழை எளிய மக்களின் நிலை என்ன என்பது நன்றாக தெரியும் அதனால் தான் இதுவரை ஏழை எளிய மக்களுக்கு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி உள்ளார்.
தற்போது விவசாயிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்துள்ளார் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் .
இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், மாதம்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர் சக்திவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை பேரூராட்சி கழகச் செயலாளர் சண்முகராஜா, தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புல்லட்கந்தசாமி, பேரூர் செட்டிபாளையம் பிரசாந், பாரதியஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மாதம்பட்டி தங்கவேல், மாதம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த சுந்தரம்,சதாசிவம், மகாலிங்கம் ,புரட்சி தம்பி பேரூர், செட்டிபாளையம் பாபு, மாதம்பட்டி ஒன்றிய தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story