சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்
ஒட்டன்சத்திரத்தில், சாலையில் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்
ஒட்டன்சத்திரம் :
தேர்தல் பிரசாரத்துக்காக ஒட்டன்சத்திரம் வழியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பழனி சென்றார். ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் நடக்க தொடங்கினார்.
சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்த மக்களிடம் கைகளை கூப்பியப்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணிக்கு வாக்கு சேகரித்தார். பழனி சாலையில் இருந்து தாராபுரம் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் வரை அவர் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக மு.க.ஸ்டாலின் திடீரென சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story