மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது
மதுரையில் புதிதாக 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்ததுள்ளது.
மதுரை, ஏப்
மதுரையில் புதிதாக 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்ததுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றும் மதுரையில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 16 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் படுக்கைகள்
இகுதுறித்து மருத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தமட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து கொரோனா வார்டாக இருந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கிடையே மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கைகள் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு குறைந்த வேகத்தில் மீண்டும் அதிகரிக்கிறது. எனவே மக்கள் கூடுதல் கவனத்துடன் பொது இடங்களுக்கு சென்று வர வேண்டும்.
தகுதி உள்ள நபர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போது தான் கொரோனா பரவலுக்கான சங்கிலி தொடரை அறுக்க முடியும். தடுப்பூசியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. விழிப்புணர்வு ஒரு புறம் இருந்தாலும், தடுப்பூசியும் அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---------
Related Tags :
Next Story