கோவை டவுன்ஹாலில் கடைகள் அடைப்பு 1000 போலீஸ் குவிப்பு


கோவை டவுன்ஹாலில் கடைகள் அடைப்பு 1000 போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 9:33 PM IST (Updated: 31 March 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி, பாதுகாப்புக்காக டவுன்ஹாலில் கடைகள் அடைக்கப்பட்டன. 1000-த்துக்கும் மேலான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

கோவை,

கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக நேற்று உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார்.

இந்தநிலையில் யோகி ஆதித்யநாத்தின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் டவுன்ஹால் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

இதையடுத்து சங்கமேஸ்வரர் கோவில் வீதி, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. பதற்றமானநிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்து பலரும் வெளியேறினார்கள். இதனால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசார் அந்த பகுதியில் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் டவுன்ஹால் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் குப்பை தொட்டிகள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர்.

எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடாத வகையில் 1000-த்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
யோகி ஆதித்யநாத் பிரசாரம் காரணமாக கோவையில் உள்ள டவுன்ஹால், உக்கடம், சுங்கம், புலியகுளம் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story