வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஊட்டி,
ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட சி-விஜில் செயலி குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா, தேர்தல் செலவின பார்வையாளர்கள் விஷால் எம்.சனப், அமர்சிங் நெஹரா ஆகியோர் பூங்கா பணியாளர்களுடன் வரிசையில் நின்று தேர்தல் தொடர்பான புகார்களை செயலில் உடனுக்குடன் தெரியப்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சி-விஜில் செயலி என்ற ஆங்கில வடிவத்தில் பூங்கா பணியாளர்கள் 250 பேர் நின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மதுபானங்கள் வழங்குவது, பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து இந்த செயலியில் புகார் தெரிவிக்கலாம். பின்னர் கட்டுப்பாட்டு அறை மூலம் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story