போலீஸ் கொடி அணிவகுப்பு
ஆறுமுகநேரி, புன்னக்காயல் பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
ஆறுமுகநேரி, ஏப்:
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரியில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. பள்ளிவாசல் பஜாரில் இருந்து புறப்பட்டு மூலக்கரை ரோடு, பூவரசூர் சர்ச், காந்தி தெரு, விநாயகர் கோவில் தெரு, வழியாக மெயின் பஜார் சென்று மீண்டும் வந்தடைந்தனர். பேரணியில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசாரும் கலந்துகொண்டனர். இதேபோல் ஆத்தூர் போலீஸ் சரகத்தி்ன் சார்பில் புன்னக்காயலில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. புன்னக்காயல் ஊரின் எல்கையில் புறப்பட்ட கொடி அணிவகுப்பு முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பஜார் வந்து முடிவடைந்தது.
Related Tags :
Next Story