காசநோய் விழிப்புணர்வு முகாம்
கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கயத்தாறு, ஏப்:
கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. செவிலியர் பரமேஸ்வரி வரவேற்றார் மருத்துவ அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய். 6 மாத காலம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும். காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். மேலும் புரதம் சார்ந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்”் என்றார். மருத்துவ அலுவலர் இலக்கியா பேசுகையில், “காசநோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்” என்றார். சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், பொது சுகாதாரம் பற்றி எடுத்துக் கூறினார். முகாமில் காசநோயாளிகள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், தொற்றா நோய் செவிலியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story