விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தரகம்பட்டி
தரகம்பட்டியில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சசிகுமார், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தரகம்பட்டி வரை சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தும், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் கீழப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் நாகேஸ்வரன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story