ரேஷன் அரிசி கடத்தியவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரேஷன் அரிசி கடத்தியவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி, ஏப்:
சாத்தான்குளம் அருகே உள்ள கீழஅம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி என்ற இளங்காமணி மகன் ராமர் (வயது 25) என்பவர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள பத்மநாபமங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மகன் பாலமுருகன் என்ற பாலா (26). இவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலமுருகன் என்ற பாலா, ராமர் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர்கள் பெர்னார்டு சேவியர், தில்லை நாகராஜன் ஆகியோர் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
Related Tags :
Next Story