உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம்
பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம்
அமித்ஷா பிரசாரம்
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் உள்ளிட்டோர் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று உத்தரபிரதேச முதல்-மந்திரி கோவை தெற்கு மற்றும் விருதுநகரில் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வேலாயுதம்பாளையம் வருகிறார்.
திறந்த வேனில்..
இதற்காக அவர் பிற்பகல் 1.45 மணி அளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் கரூர் மாவட்டம், தளவாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி திடலில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் வேலாயுதம்பாளையம் ஹைல்கூல் மேடு வரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு பிரசார வாகனத்தில் திறந்த வேனில் நின்றபடி வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவிற்கு வருகிறார். பின்னர் அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். தொடர்ந்து பா.ஜ.க. பூத்கமிட்டி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.
கரூர் மாவட்டத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story