விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 April 2021 12:05 AM IST (Updated: 1 April 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்
கரூர் மாவட்டம் கரைபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் பிரசித்தி பெற்ற வல்லபை கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுத்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் மற்றும், அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story