தர்மபுரி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழகத்தில் கடந்த ஆண்டு டாக்டர் படிப்பை முடித்த மாணவ,மாணவிகள் ஒரு ஆண்டு காலம் பயிற்சி டாக்டர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இதன்படி கடந்த ஆண்டில் பயிற்சி டாக்டர்கள் ஆக பணியை தொடங்கியவர்களுக்கு நேற்று ஓராண்டு பயிற்சி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் பயிற்சி டாக்டர்களின் பயிற்சி காலத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டிப்பு செய்து மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி காலத்தை முடித்த டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி கால நீட்டிப்பு உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். பயிற்சி காலம் முடிந்த டாக்டர்களை விதிமுறைகளின்படி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story