தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ-மாணவிகள்
மாணவ-மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிங்கம்புணரி,
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 100 சதவீத வாக்குகள் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு தமிழகஅரசு சார்பிலும் தேர்தல் ஆணையம் சார்பிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரி பஸ் நிலையம் பகுதியில் 3-வது படிக்கும் மாணவன் வருண், மாணவன் நிகிலன், மாணவி வர்ணா ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், நியாயமாக வாக்களியுங்கள், பணத் திற்காக ஓட்டை விற்காதீர்கள், ஓட்டை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான், உங்கள் எதிர்காலத்தை எண்ணி வாக்களியுங்கள், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று கூறி பஸ் நிலையம் வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story