வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
ஆலங்குடி,ஏப்.1-
ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 23-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. 9-ம் நாள் மண்டகப்படியான நேற்று மதுஎடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரடிப்பட்டி, வம்பன், மாஞ்சன் விடுதி, மழவராயன்பட்டி, பாப்பன்பட்டி - வம்பன் நால்ரோடு, கொத்தக் கோட்டை, தோப்புப் பட்டி, தெற்கு தோப்பட்டி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பெண்கள் தென்னம்பாளையை பானையில் சொருகி பாளையை பல வண்ண மலர்ச்சரங்களால் அலங்கரித்து மதுக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க மேள வாத்தியம் முழங்க கோவிலைச் சுற்றி வந்த பெண்கள் அம்மனுக்கு முன்பு மதுக்குடத்தை இறக்கி வைத்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Related Tags :
Next Story