3 குழந்தைகளின் தந்தை விஷம் குடித்து தற்கொலை
3 குழந்தைகளின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி, ஏப்.1-
கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி சுசிலா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக ராஜா விஷம்குடித்து, தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று ராஜா இறந்தார். இதுகுறித்து ராஜாவின் தாய் சின்னப்பொண்ணு மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story