நெல்லை பேட்டையில் ரெயில்வே மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
நெல்லை பேட்டையில் ரெயில்வே மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை பேட்டையில் ெரயில்வே மருத்துவமனை ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டு
நெல்லை பேட்டை அருகே உள்ள திருமலை நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). இவர் சந்திப்பு ரெயில்வே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 27-ந் தேதி தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். மறுநாள் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரதீப் (21), அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் அன்பு ராஜன் (21) ஆகியோர் முத்துகிருஷ்ணன் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வீட்டில் திருடப்பட்ட நகை, பணம் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story