பாளையங்கோட்டையில் ஆர்வமுடன் தபால் ஓட்டு போட்ட போலீசார்
பாளையங்கோட்டையில் போலீசார் ஆர்வமுடன் தபால் ஓட்டு போட்டனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் போலீசார் ஆர்வமுடன் தபால் ஓட்டு போட்டனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
போலீசாருக்கு தபால் ஓட்டு
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய போலீசாருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தபால் ஓட்டு போடும் பணி மாவட்டம் வாரியாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தபால் ஓட்டு போடுவதற்காக பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு தொகுதி வாரியாக தனித்தனி வாக்குப்பதிவு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இங்கு ஆர்வமுடன் வந்த போலீசார் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து, அங்குள்ள பெட்டியில் போட்டு சென்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கலெக்டர் விஷ்ணு ஆய்வு
போலீசார் தபால் ஓட்டு போடும் பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
2,451 போலீசார்
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீசார் வாக்களிப்பதற்காக இந்த வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இ்ங்கு மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் போலீசார் 195 பேர், 12-வது பட்டாலியன் போலீசார் 29 பேர், மாவட்ட போலீசார் 1194 பேர், மாநகர போலீசார் 1033 பேர் என மொத்தம் 2,451 பேர் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று (அதாவது நேற்று) வாக்களிக்க முடியாதவர்கள் நாளை (அதாவது இன்று) வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வாக்களிக்க கடந்த 30-ந்தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 3,403 பேர் இந்த பிரிவின் கீழ் வாக்களிக்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனா பரவலை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வாக்களிக்க வர வேண்டும்.
ஒரு வாக்குச்சாவடியில் 1,400 பேர் வாக்களித்து வந்த நிலையில் தற்போது 1,050 பேர் என குறைக்கப்பட்டு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story