திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் தர்ணா


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 1 April 2021 1:49 AM IST (Updated: 1 April 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

5½ ஆண்டுகள் பூர்த்தி ஆகியும் விடுவிக்க மறுப்பதாக கூறி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5½ ஆண்டுகள் பூர்த்தி ஆகியும் விடுவிக்க மறுப்பு:
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் தர்ணா
திருச்சி, ஏப்.1-
5½ ஆண்டுகள் பூர்த்தி ஆகியும் விடுவிக்க மறுப்பதாக கூறி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி நிறைவு

திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 150 பயிற்சி டாக்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்த அவர்கள், 4 ஆண்டுகள் படிப்பு முடிந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றினர். 

கொரோனா காலக்கட்டத்திலும் கட்டாய பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான ஓராண்டு பயிற்சி கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதியுடன் பூர்த்தி அடைந்தது. அப்போது, ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை விடுவிக்க மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு வந்ததாக தெரிகிறது.

திடீர் தர்ணா 

இதற்கிடையே மருத்துவக்கல்வி இயக்குனரகம் பயிற்சி டாக்டர்களாக தொடர்ந்து பணியாற்ற நேற்று புதிதாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதை பயிற்சி டாக்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

காலநீட்டிப்பு டூட்டி டாக்டர்களாக பணி அமர்த்தி சம்பள வரன்முறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மதியம் பயிற்சி டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். மேலும் பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:-

3 மாத ஊக்கத்தொகை நிலுவை

பயிற்சி டாக்டர்களாக பணியாற்றும் காலக்கட்டத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது. அவற்றில் இன்னும் 3 மாத நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றும்போது 2 மடங்கு ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

 ஆனால், அதுபோன்ற ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட வில்லை. பயிற்சி டாக்டர்களாக தொடரும் பட்சத்தில் எங்களை புரோமட் செய்து டூட்டி டாக்டர்களாக பணியமர்த்த கேட்டுக்கொள்கிறோம். அதுவரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story