ஊழியருக்கு கொரோனா தொற்று: நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்
ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.
நெல்லை:
ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.
கொரோனா தொற்று
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மற்றும் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் உள்பட 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 92-ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 161 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 215 பேர் இறந்துள்ளனர்.
போக்குவரத்து அலுவலகம் மூடல்
இதற்கிடையே, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது. அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அங்கு வருபவர்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக வருகிற 3-ந் தேதி வரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மூடுவதற்கு மாநகராட்சி நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு இதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டதால் புதிய வாகனங்கள் பதிவு
செய்ய முடியாமலும், ஓட்டுனர் உரிமம் பெற முடியாமலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story