96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவு


96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவு
x
தினத்தந்தி 1 April 2021 2:18 AM IST (Updated: 1 April 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

சிவகாசி, 
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 
தபால் வாக்கு 
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தபால் வாக்கு அளிக்க சலுகை அளிக்கப்பட்டது. 
அதன்படி இந்த சலுகையை பயன்படுத்த சிவகாசி தொகுதியில் 308 பேர் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சிவகாசி தேர்தல் நடத்தும் அலுவலர் 5 குழுக்களை நியமித்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு செய்யப்பட்டது. 
அவகாசம் 
இதில் இதுவரை சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 294 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து அதிகாரிகளிடம் வழங்கினர். அதாவது 96 சதவீதம் பதிவாகியது. 
விருப்பம் தெரிவித்த வாக்காளர்களில் 14 பேர் மட்டும் இன்னும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வழங்க வில்லை. இவர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது என சப்-கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Next Story