தாளவாடி அருகே நாட்டு வெடியை கடித்த பசுமாடு படுகாயம்
தாளவாடி அருகே நாட்டு வெடியை கடித்த பசுமாடு படுகாயம் அடைந்தது.
தாளவாடி அருகே நாட்டு வெடியை கடித்த பசுமாடு படுகாயம் அடைந்தது.
நாட்டு வெடி
தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேசா (வயது 50). கூலி தொழிலாளி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். மல்லேசா நேற்று வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்போது அங்கு கீழே கிடந்த நாட்டு வெடியை பசுமாடு ஒன்று கடித்துள்ளது. இதில் நாட்டு வெடி வெடித்தில், பசு மாட்டின் வாய்ப்பகுதி சிதறி ரத்தம் சொட்ட கீழே விழுந்து உயிருக்கு போராடியது.
காட்டு்ப்பன்றியை வேட்டையாட
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, ‘மர்மநபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்து வருகின்றனர். அதை இரை என்று நினைத்து மாடுகள் தெரியாமல் கடிப்பதால் வெடித்து இறந்து விடுகின்றன. எனவே காட்டு்ப்பன்றியை வேட்டையாடும் மர்மநபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.’ என்றனர்.
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி தாளவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story