ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறையினர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறையினர் தகவல்
x
தினத்தந்தி 1 April 2021 2:58 AM IST (Updated: 1 April 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் முதல் கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன.  கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 
45 வயதுக்கு மேற்பட்ட...
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை
ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகளிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக அந்த மையத்திற்கு சென்று தங்களுக்குரிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் செலுத்தியும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story