வீடுகளில் இருந்தபடியே வாக்களித்த முதியவர்கள்


வீடுகளில் இருந்தபடியே வாக்களித்த முதியவர்கள்
x
தினத்தந்தி 1 April 2021 3:08 AM IST (Updated: 1 April 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வீடுகளில் இருந்தபடியே முதியவர்கள் தபால் வாக்களித்தனர்

திருப்பூர்
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்கும் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த வாக்காளர்களுக்கு 12 டி படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து பெற சட்டமன்ற தொகுதி வாரியாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 441 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 ஆயிரத்து 430 என மொத்தம் 3 ஆயிரத்து 871 வாக்காளர்கள் வீடுகளில் இருந்தபடியே வாக்களிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக வீடுகளில் இருந்தபடியே இந்த வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்தினர். அவர்களது வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் வாக்குசீட்டுகளை பெற்று வந்தனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்வாபாய் பள்ளி அருகே புதுநகர் குடியிருப்பு பகுதியில் முதியவர்கள், மூதாட்டிகள் என பலரும் உற்சாகமாக வாக்களித்தனர்.

Next Story