பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பல்லடம் அருகே குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி 4வது நாளாக பொதுமக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்
பல்லடம் அருகே குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி 4 வது நாளாக பொதுமக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இ்ங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. என்றும், ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு வீடுகளுக்கு அதிக அளவில் வரிவிதிப்பு செய்துள்ளதாகவும், கூறி, கடந்த 2 நாட்களாக அங்குள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், காலிக்குடங்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்து வந்த, வீட்டுவசதி வாரிய பொறியாளர் விசாகவேல், குடிநீர் வாரிய ஜெய்கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மாள், பல்லடம் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரு வார காலத்திற்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்து சரிபார்ப்பது என்றும், தேர்தல் முடிந்தவுடன், வரிவிதிப்பு குறித்து பேசிக்கொள்ளலாம் என்றும், முடிவு செய்யப்பட்டது.
கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு
இதனை ஏற்றுக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் சொன்னதுபோல் குடிநீர் வரவில்லை என்று நேற்று முன்தினம் அந்தப்பகுதி மக்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அத்தியாவசிய தேவையான குடிநீரை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், வரிவிதிப்பில் சலுகை தர வலியுறுத்தியும், அரசு அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை பாராமுகமாய் இருப்பதை உணர்த்தும் வகையில் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கஞ்சித்தொட்டி திறந்தும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
Related Tags :
Next Story