எஸ்.எஸ்.பி.நகர் மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


எஸ்.எஸ்.பி.நகர் மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 1 April 2021 3:24 AM IST (Updated: 1 April 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.பி.நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தார்கள்.

எஸ்.எஸ்.பி.நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தார்கள்.
மகா மாரியம்மன்
ஈரோடு சூளை எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மாதம் 23-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அக்னி சட்டி
நேற்று காலை 7 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மாலை 4 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story