காரில் வந்தவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்


காரில் வந்தவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2021 4:22 AM IST (Updated: 1 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்தவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சோதனையில் 259 ஜீன்ஸ் பேண்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கேயம்
உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்தவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சோதனையில் 259 ஜீன்ஸ் பேண்ட்  பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
காங்கேயம் அருகே முத்தூர் சாலையில் உள்ள படியாண்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை 8.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து  460 இருப்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது. 
இதையடுத்து அந்த  பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் துணை தாசில்தார் சந்திரசேகர் காங்கேயம் சார் நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தார்.
ஜீன்ஸ் பேண்ட்
இதேபோல் காங்கேயம் அருகே பழையகோட்டை சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையின் மற்றொரு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு காரில் எடுத்து வரப்பட்ட 259 ஜீன்ஸ் பேண்ட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை காங்கேயம் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story