சேலம் மாவட்டத்தில் 50 பேருக்கு கொரோனா
50 பேருக்கு கொரோனா
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 38 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
304 பேருக்கு சிகிச்சை
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 488 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
304 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 7 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story