சமயநல்லூர் ஊராட்சி,பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் பேச்சு


சமயநல்லூர் ஊராட்சி,பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 9:10 AM IST (Updated: 1 April 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தபடும் என்று வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளேன். இனியும் என்னதேவை உள்ளதோ அனைத்தையும் பெற்றதர தயாராயிருக்கிறேன்.   சமயநல்லூர் ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சியாக்க பாடுபடுவேன். அரியூரில் அடிப்படை வசதிகள், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் விதத்தில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் ஆட்சிக்குவந்ததும் வீட்டுக்கு ஒரு வாசிங்மிஷன், ஆண்டு 6 விலையில்லா சிலிண்டர் என்று அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனவே அதிக அளவில் இரட்டை இலையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

உடன் ஒன்றியசெயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள், பாலு ஆதிமூலம், மலையாளம், மாவட்ட இணைசெயலாளர் பஞ்சவர்ணம், பரமசிவம், சரிதாபானு, ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ஜெயதாராதாகிருஷ்ணன், ஊராட்சிசெயலாளர் பாஸ்கரன், லோகேஸ்வரன், சோனை முத்துலோகசுந்தரி, நல்லமணி கூட்டுறவு சங்கதலைவர் மலர்கண்ணன், துணைதலைவர் ராகுல், சாமிநாதன் பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயபாண்டி, சோமசுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story