இரட்டை இலைக்கு வாக்களித்தால் அ.தி.மு.க.வின் திட்டங்கள் உங்கள் இல்லம் தேடி வரும் கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் பிரசாரம்


இரட்டை இலைக்கு வாக்களித்தால் அ.தி.மு.க.வின் திட்டங்கள் உங்கள் இல்லம் தேடி வரும் கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 9:22 AM IST (Updated: 1 April 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை,

கிழக்கு தொகுதி உட்பட்ட மந்திக்குளம், கருவனூர், பெத்தாம்பட்டி, தவிட்டாம்பட்டி, பூலாம்பட்டி, மீனாட்சிபுரம், மாலைப்பாட்டி, தொண்டமான்பட்டி, கடவூர், கல்லம்பட்டி, அண்ணாநகர், சீகுப்பட்டி, சத்திரப்பட்டி, கள்ளக்குத்தல், மஞ்சம்பட்டி ஆகிய பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அவரை பூ தூவியும், ஆரத்தி எடுத்து, பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 

அமைதி, வளம், வளர்ச்சி என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை லட்சியமாக கொண்டு செயலாற்றி வருகிறேன். கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் பெரும் குறையாக இருப்பது சாலை மற்றும் குடிநீர் வசதி தான். நான் வெற்றி பெற்ற உடன் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் சிமெண்ட் சாலை வசதியை ஏற்படுத்தி தருவேன். 

இது தவிர முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு வாசிங்மிஷன், ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு ரூ.1,500, வீடு இல்லாத அனைவருக்கும் வீடு, 200 யூனிட் இலவச மின்சாரம், வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை தாலிக்கு தங்கம், நிதியுதவி மற்றும் புதிதாக மணமக்களுக்கு சீர்வரிசையாக கட்டில், மெத்தை, பட்டு சேலை, வேட்டி, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் வழங்கப்படும். எனவே ஏழை தொண்டன் எனக்கு இரட்டை இலைக்கு வாக்களிப்பதன் மூலம் அ.தி.மு.க.வின் திட்டங்கள் எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் என்றார்.

பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் வாசு, மாணவரணி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், ராமமூர்த்தி, திருப்பதி, அழகர்சாமி, உதயன், முனியாண்டி, ஐ.பி.எஸ்.பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story