தொண்டாமுத்தூரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி வாகனத்தை சிறைபிடித்த தி.மு.க.வினர்
தொண்டாமுத்தூரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி வாகனத்தை தி.மு.க.வினர் சிறைபிடித்தனர்.
பேரூர்,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தெலுங்குபாளையம் சுப்பிரமணியர் வீதியில் வாகனத்தில் வந்த ஒரு நபர் வீடு, வீடாக சென்று வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதாக தகவல் பரவியது.
அதன்பேரில் அங்கு திரண்ட தி.மு.க.வினர், அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த செந்தில் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story