கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2021 3:55 PM IST (Updated: 1 April 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே கூடச்சேரியில் உள்ள முட்புதரில் பணம் வைத்து சூதாடுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கவுதம் (வயது 27), வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (48), மூர்த்திப்பட்டிைய சேர்ந்த குமரவேல் (38), கூடச்சேரிைய சேர்ந்த சதீஷ் (38), மாலிப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (27), பூசாரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகியோர் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story