துறையூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் - தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமாரை ஆதரித்து கே.என்.நேரு பேச்சு


துறையூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் - தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமாரை ஆதரித்து கே.என்.நேரு பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 5:03 PM IST (Updated: 1 April 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

துறையூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமாரை ஆதரித்து கே.என்.நேரு பேசினார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில்துறையூர் தனி தொகுதியில்தி.மு.க வேட்பாளர் ஸ்டாலின் குமாரை ஆதரித்துதுறையூர் தொகுதியில் உள்ள துறையூர் ஊராட்சி ஒன்றியம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலையில் மணலோடை, டாப் செங்காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைகிராமபகுதிகளில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசும்போது, திருச்சியை பொருத்தவரை துறையூர் தொகுதி எப்போதும் தி.மு.க. தான் வெற்றி பெற்று வருகிறது. 

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதியும் தி.மு.க. வெற்றி பெறும், எல்லா இடத்திலும் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்பார். அவர் முதல்-அமைச்சரானால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தமிழ்நாடு இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுக்கும். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை வாக்குறுதியாக அளித்துள்ளார். 

அந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் மற்றும் மலைவாழ் மக்களாகிய உங்களுக்கும் வந்தடைய, ஸ்டாலின்குமாரை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். 2016-ம் ஆண்டு நீங்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டாலின் குமார் பல்வேறு நலத்திட்டங்களை துறையூர் மற்றும் பச்சை மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கும் செய்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருச்சி வடக்கு மாட்ட செயலாளர் காடு வெட்டி தியாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன்ராஜேந்திரன், துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணா துரை, உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடர்நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர துணை செயலாளர்கள் 
ராஜேஸ்வரிசேகர், சுதாகர், பிரேம் உள்பட கட்சி தொண்டர்கள் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story