சின்னமனூரில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு
சின்னமனூரில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும், பதற்றத்தை தணிக்கவும் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
இதற்கு சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளான சீப்பாலக்கோட்டை சாலை, முத்தாலம்மன் கோவில், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் மார்க்கையன்கோட்டை ரவுண்டானாவை வந்தடைந்தது.
Related Tags :
Next Story