வருசநாடு அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வருசநாடு அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர்காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவருடைய மகள் சங்கீதா (வயது 19) நிலக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப பிரச்சினை தொடர்பாக சங்கீதாவை அவரது தாயார் பரமேஸ்வரி கண்டித்துள்ளார்.
எனவே சங்கீதா அவரது தாயாருடன் பேசாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் மனம் உடைந்த சங்கீதா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story