அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்துள்ளது ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பிரசாரம்


அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்துள்ளது ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 6:35 PM IST (Updated: 1 April 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்துள்ளது என்று ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் கூறி பிரசாரம் செய்தார்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முதலில் கம்பரசம்பேட்டை பகுதியில் தொடங்கி முத்தரசநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். 

அப்போது அ.தி.மு.க.வின் வெற்றி பற்றி பட்டியலிட்டார். மேலும் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களுக்காக செய்து வருகிறார். அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து ஒன்றியத்திற்குட்பட்ட அல்லூர், திருச்செந்துறை ஜீயபுரம் கடைவீதி, பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து மணப்பாறை பகுதியில் கு ப கிருஷ்ணன் பேசுகையில், இந்திய துணை கண்டத்தில் எதிரிகள் எங்கு இருந்தாலும் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களை வேரறுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் வடுகபட்டி, தொப்பம்பட்டி, ஆளிபட்டி, நடுப்பட்டி, பூங்குடிப்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
 
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், த.மா.கா. கணேசன், ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், கோபால், செல்வராஜ் சுப்பிரமணி, சதீஷ்குமார் பாரதீய ஜனதா கட்சி கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story