சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி - அ.தி.மு.க வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு ஆதரவாக குமரன் காலனியில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. வாக இருந்து, இந்த தொகுதி ஏற்றம் பெற, வளர்ச்சி பெற பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தியவர் சைதை துரைசாமி. சைதை என்றாலே சைதை துரைசாமி தான் ஞாபகத்துக்கு வருவார். தனக்கென தனி முத்திரை இந்த தொகுதியில் பதித்துள்ளார். சைதை துரைசாமி என்னைவிட வயது மூத்தவர், என்னைவிட சிறப்பாக செயல்படக் கூடியவர், மேயராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இந்த மாநகர மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இப்படிப்பட்ட திறமையான வேட்பாளரை இறைவன் உங்களுக்கு கொடையாக தந்துள்ளார்.
அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை தாருங்கள். மனிதநேய அறக்கட்டளை நடத்தி தமிழ் மண்ணில் நம் குழந்தைகள் உயர் பதவிக்கு வருவதற்கு துணை நிற்கிறார், தன்னலமற்றது மனிதநேய அறக்கட்டளை, பலரின் வாழ்க்கை உயர்வதற்கு தூணாக இருந்தவர், சிலரிடம் பணம் இருக்கும், மனம் இருக்காது, பணமும் மனமும் இருக்கின்ற ஒரே வேட்பாளர் சைதை துரைசாமி தான்.
எம்.ஜி.ஆரின் நன்மதிப்பைப்பெற்றவர், அவரின் மனதில் தனி இடத்தை தக்க வைப்பது எளிதான காரியமல்ல.மேயராக இருந்த காலத்தில் சென்னையில் சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், தெருக்கள், என மூன்று லட்சத்து 2 ஆயிரம் பணிகளை சைதை துரைசாமி செய்து செய்துள்ளார் ,ஒரு திறமையான
மனிதர் பொறுப்பில் இருந்தால் தான் அந்த நிர்வாகம் திறமையாக இருக்கும்.
அப்படிப்பட்ட திறமையான மனிதர் நம்முடைய வேட்பாளராக கிடைத்திருக்கிறார். சைதை துரைசாமி தன்னலமில்லாமல்,அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவையாற்ற கூடிய மனப்பக்குவம் கொண்டவர். அப்படிப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது இந்த தொகுதி மேலும் வளர்ச்சி பெறும், உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். சைதை துரைசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Related Tags :
Next Story