நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு
அனுமதியின்றி இருசக்கர வாகன பேரணி சென்ற நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து, ஊட்டியில் நேற்று முன்தினம் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். இதையொட்டி கமர்சியல் சாலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர்.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது பா.ஜ.க.வினர் சிலர் இருசக்கர வாகனங்களில் கட்சி கொடிகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பேரணிக்கு அனுமதி பெறவில்லை. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் அனுமதி பெறாமல் இருசக்கர வாகன பேரணி சென்றதாக நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story