அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர்


அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர்
x
தினத்தந்தி 1 April 2021 9:16 PM IST (Updated: 1 April 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று நடிகை ரோகிணி குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்:

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது:-

கடந்த ஆண்டு பல்வேறு சம்பவங்களுக்காக போராட்டம் நடத்தி உள்ளோம். குறிப்பாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கூறலாம். 

இந்த சட்டத்தின்படி உங்கள் அப்பா, தாத்தா ஆகியோரின் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்திய குடிமகன் என்று நிரூபணமாகும். 

மேலும் இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது ஆகும். 

அதன் பிறகு 8 வழிச்சாலை, புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தினோம். 

அவற்றின் தாக்கம் குறைவதற்குள் வேளாண் திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு துணை நின்றது. 

ஆனால் இப்போது தேர்தலுக்காக அ.தி.மு.க. அரசு வெற்றி பெற்றால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு நாங்கள் குரல் கொடுப்போம் என்று அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story