பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்


பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 1 April 2021 10:25 PM IST (Updated: 1 April 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்

பனைக்குளம்
மண்டபம் யூனியன் இரட்டையூரணி கிராமத்தில் மருத்துவ உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த மார்ச் மாதம் 21 -ந் தேதி தொடங்கியது. விழாவில் கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்தும், முளைப்பாரி சுமந்தும், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மறுநாள் அம்மனுக்கு காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story