கடல் பகுதியில் 34 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள்


கடல் பகுதியில் 34 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள்
x
தினத்தந்தி 1 April 2021 10:25 PM IST (Updated: 1 April 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி அருகே நேற்று கடல் பகுதியில் 34 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் கிடந்தது

ராமநாதபுரம்
திருப்புல்லாணி அருகே நேற்று கடல் பகுதியில் 34 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் கிடந்தது. இவைகளை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றபோது கடலில் தவறி விழுந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா மூடை
ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு கடத்தி செல்லப்படும் கஞ்சா இங்கேயே சில சமயம் பிடிபட்டு விடுகிறது அல்லது இலங்கையில் பிடிபட்டு வருகிறது. இதனையும் மீறி கஞ்சா கடத்தல் என்பது அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் கஞ்சா மூடை ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீசார் அங்கு விரைந்து சென்று அதனை கைப்பற்றினர்.
கடத்த முயன்றதா?
அதில் பிளாஸ்டிக் பைகளால் சுற்றிய நிலையில் தலா 2 கிலோ அளவில் 17 பாக்கெட்டுகளில் சுமார் 34 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா முழுவதும் கடல்நீரில் மூழ்கி கருமையான நிறத்தில் இருந்தது. இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றபோது கடத்தல்காரர்கள் பிடிபட்டு விடுவோம் என்று அஞ்சி கடலில் வீசி எறிந்ததா அல்லது நாயகன் பட பாணியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி கடலுக்குள் வீசி கொண்டு சென்றபோது கழன்று விழுந்ததா என்று தெரியவில்லை. 
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story