இலங்கை அகதி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயம்


இலங்கை அகதி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயம்
x
தினத்தந்தி 1 April 2021 10:26 PM IST (Updated: 1 April 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இலங்கை அகதி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயம்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் பரவ தொடங்கியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடமாடும் வாகனங்களில் சென்று கிராமங்கள் தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்துவது, அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் திடீரென்று ஆஸ்பத்திரியில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. கொரோனா உறுதி செய்யப்பட்ட அகதி ஒருவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறியதால் அவர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதை அறிந்து சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். போலீசார் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த அகதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story