கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 2,937 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  இதுவரை 2,937 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்
x
தினத்தந்தி 1 April 2021 10:40 PM IST (Updated: 1 April 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 2,937 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி

தேர்தல் பணியில் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் பணியில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 8,518 பேர், வெளி மாவட்டத்தை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், காவல் துறையினர் 2,648 பேர் என மொத்தம் 11,164 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 5,198 பேர், வெளிமாவட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 2,048 பேர் என மொத்தம் 7,246 பேர் தபால் ஓட்டு்ப்போட விருப்பம் தெரிவித்து படிவம் (12) பெற்றுள்ளனர். அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 17,560 பேரில் 1,376 பேரும், 10,862 மாற்றுத்திறனாளிகளில் 652 பேரும், பத்திரிக்கையாளர்கள் 11 பேர், இந்திய ராணுவப் பணியில் உள்ள 296 பேர் தபால் ஓட்டுப்போட படிவம் பெற்றுள்ளனர். 

2,937 தபால் ஓட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை உள்ள நிலவரப்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என 1,074 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,251 பேர், மாற்றுத்திறனாளிகள் 606 பேர், பத்திரிகையாளர்கள் 6 பேர் என மொத்தம் 2,937 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்.


Next Story