காட்பாடியில் உரிமம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 7 லட்சத்து 78 ஆயிரத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல்
காட்பாடியில் உரிமம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 7 லட்சத்து 78 ஆயிரத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
காட்பாடி
தீவிர வாகன சோதனை
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காட்பாடி முத்தரசிகுப்பம் பகுதியில் சரஸ்வதி தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காட்பாடி -குடியாத்தம் சாலையில் பாரி தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் சங்கர் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
காட்பாடி அருகே குப்புராமன் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ.7 லட்சத்து 78 ஆயிரம்..
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 4 நிலை கண்காணிப்பு குழுவினரும் பறிமுதல் செய்த ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்தை காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் சார் கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story