பரமக்குடி தொகுதி விவசாயிகளுக்கு இலவச கதிர் அறுக்கும் இயந்திரங்கள் - அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் வாக்குறுதி


பரமக்குடி தொகுதி விவசாயிகளுக்கு இலவச கதிர் அறுக்கும் இயந்திரங்கள் - அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி தொகுதி விவசாயிகளுக்கு இலவச கதிர் அறுக்கும் இயந்திரங்கள் வாங்கி கொடுப்பேன் என அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் வாக்குறுதி அளித்தார்.

பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் நயினார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட காரடர்ந்த குடி, மணக்குடி, குயவநேந்தல், ஆட்டாங்குடி, மருதூர், வாகவயல், பொட்டகவயல்,அரசனூர், கொட்டகுடி , சேது கால் உள்பட 25- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். 

அப்போது கிராமத்து பெண்கள் குத்து விளக்கேற்றி வரவேற்பு அளித்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர். வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் சதன் பிரபாகர் பேசியதாவது:-

பரமக்குடி தொகுதியில் அ.தி.மு.க. 8 முறை வெற்றி பெற்றுள்ளது அதற்கு காரணம் மக்கள் பணி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில்தான் மக்கள் பயனடைகின்றனர். தி.மு.க.ஆட்சியில் தமிழ்நாடு மின்தடையால் இருளில் மூழ்கியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைதான். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். அனைத்து தலைவர்களும் பாராட்டுகின்றனர்.கடந்த தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் பரமக்குடி தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எனது சொந்த செலவில் கதிர் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் விவசாயக் கருவிகள் அனைத்தையும் வாங்கி கொடுப்பேன். அதை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் கதிர் அடிக்கும் தளம் அமைத்துக் கொடுக்கப்படும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொற்கால ஆட்சிஎன்பதைமறந்துவிடக்கூடாது. 

இவ்வாறு பேசினார். 

அவருடன் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வினிதா குப்புசாமி உள்பட நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்
வாக்கு சேகரித்தனர்.

Next Story