பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி


பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 April 2021 11:20 PM IST (Updated: 1 April 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 154 பதற்றமான வாக்குசாவடிகளில் பணியாற்ற இருக்கும்  நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திலும் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மனோஜ்கத்தாரி, மீனஜ்ஆலம், நீல்காந்த்ஆவாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வாணியம்பாடி 31, ஆம்பூர் 68, ஜோலார்பேட்டை 27 மற்றும் திருப்பத்தூர் 28 என மொத்தம் 154 பதற்றமான வாக்குசாவடிகளில்  171 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க், லட்சுமி, காயத்திரிசுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவப்பிரகாஷம், மோகன், சுமதி மற்றும் நுண்பார்வையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Next Story