மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம், தொகுதியினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் - காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி பிரசாரம்


மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம், தொகுதியினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் - காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் மாங்குடி காரைக்குடி, தேவகோட்டைஒன்றியம் ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் களம் நமக்கு சாதகமாக உள்ளது. தேர்தலில் எனக்கு போட்டி இருப்பதாக நான் கருதவில்லை. என்மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் சுமத்த வாய்ப்பு இல்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரைக்குடியில் தற்போது உள்ள அரசு கலைக் கல்லூரியில் சேருவதற்கு மாணவமாணவிகளிடம் இருந்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் 3 ஆயிரம் பேருக்கே இடம் கிடைக்கிறது. ஆதலால் மகளிருக்கென தனியாக ஒரு அரசுகலைக்கல்லூரி ஏற்படுத்துவேன். பகுதி
மக்களின் நீண்டகால கோரிக்கையான சட்டக்கல்லூரியை கொண்டுவருவேன்.

தேவகோட்டையில்அரசுமேல்நிலைப் பள்ளியை ஏற்படுத்துவேன். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நெசவுத் தொழிலை ஊக்குவிப்பேன்.காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை துரிதப்படுத்தி சாலைகளை முழுமையாக சீரமைப்பேன். கோவிலூரில் உள்ள ரசாயன ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பேன்.செட்டிநாட்டு உணவுவகைகள், பலகாரங்கள்,தின்பண்டங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று அவற்றை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்வதற்கு வழி செய்வேன்.தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கொண்டுவந்து நிறைவேற்றுவேன். 

காரைக்குடி நகராட்சியினைமாநகராட்சியாக மாற்றுவேன். சாக்கோட்டை, தேவகோட்டை,கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த தேவைப்படும் இடமெல்லாம் ஆழ்குழாய் கிணறு அமைத்து அப்பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்தவும், அப்பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம், சேமிப்புக் கிடங்குகள்அமைக்கவும் ஏற்பாடு செய்வேன்.தமிழ்நாட்டில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் புதுவயலில்உள்ள நவீன அரிசி ஆலைகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அரிசி யினை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. 

இத்தொழிலை மேலும் நவீனப்படுத்த அரசிடம் மேலும் பல சலுகைகள் பெற்றுக் கொடுப்பேன். அதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகப்படுத்து வேன். நலிவடைந்த அரிசி ஆலைகள் மீண்டும் இயங்க நடவடிக்கை மேற்கொள்வேன். சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் காய்கறி, மல்லிகை விளைச்சல் அதிகம் இருப்பதால் அங்கு உற்பத்தி யாகும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க அவற்றை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். தொகுதியின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த அரசு மற்றும் தனியார் மூலம் தொழிற்பேட்டைகள் கொண்டுவருவேன். 

காரைக்குடியின் குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்றுபகுதியை பாதுகாப்பேன். காரைக்குடி தேவகோட்டை சாலையில் உள்ள சங்கரபதி கோட்டை யினை சீரமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அதனை சுற்றுலா தலமாக மாற்றுவேன்.மு.க.ஸ்டாலினை முதல்வ ராக்குவோம். தொகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம். 

இவ்வாறு பேசினார்.

Next Story