வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?


வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
x
தினத்தந்தி 1 April 2021 11:30 PM IST (Updated: 1 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி,
வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

3-ம் கட்ட பயிற்சி வகுப்பு

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலின் போது அந்தந்த தேர்தல் மையத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு ஏற்கனவே சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு பள்ளி மற்றும் மகரிஷி மெட்ரிக் பள்ளியில் 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மகரிஷி மெட்ரிக் பள்ளியில் 1,300 அரசு அலுவலர்களும், ராமநாதன் செட்டியார் அரசு பள்ளியில் 800 அலுவலர்களும் 3-ம் கட்ட பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையிலும் காரைக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தேவகோட்டை கோட்டாட்சியருமான சுரேந்திரன் முன்னிலையிலும் நடந்தது."

கடைபிடிப்பது என்னென்ன?""

இந்த பயிற்சியின் போது வாக்கு பதிவு நாள் அன்று தேர்தல் அலுவலர்கள் கடைபிடிப்பது என்னென்ன? என்று விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்குபதிவு மையத்திற்கு வரும் வாக்காளர்கள் முககவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். வாக்குப்பதிவு மையத்துக்கு வரும் வாக்காளர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.
 வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களின் முகவரியை சரிபார்த்து பதிய வேண்டும்.
அதோடு அவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை கொண்டு வந்துள்ளார்களா? என்பதை கண்காணிப்பது அவசியம்.
வாக்காளர்களின் கைவிரலில் அடையாள மை எவ்வாறு வைப்பது என்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் அவர்கள் சரியான முறையில் வாக்கு பதிவு செய்வதற்காக சத்தம் கேட்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இதுதவிர வாக்கு பதிவு மையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் ஆகியோருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக பயிற்சி வகுப்பில் மாதிரி வாக்கு பதிவு மையம் அமைத்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story