உடன்குடியில் பிரசார வாகனம் பறிமுதல்; 2 பேர கைது


உடன்குடியில் பிரசார வாகனம் பறிமுதல்; 2 பேர கைது
x
தினத்தந்தி 1 April 2021 11:51 PM IST (Updated: 1 April 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
உடன்குடி சந்தை பஜாரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உரிய அனுமதி இன்றி லோடு ஆட்டோவில் ஒலிப்பெருக்கியை அதிக சத்தமாக வைத்துக் கொண்டு பிரசாரம் செய்ததாக, அ.தி.மு.க. பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து குலசேகரன்பட்டிணம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெஞ்ஞானபுரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த ஜெயராம், வேப்பங்காட்டை சேர்ந்த சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், பறக்கும் படை அலுவலர் ராமராஜ் மற்றும் ஊழியர்கள் உடன்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி செட்டியாபத்தில் மகேஸ்வரன் என்பவரது ஏற்பாட்டில் தி.மு.க., காங்கிரஸ் கொடிகள் சவுக்கு கம்பில் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமராஜ் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story