காரைக்குடியில் கனிமொழி எம்.பி. பிரசாரம்
காரைக்குடியில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.
காரைக்குடி,
பெண்களின் பாதுகாப்பு குறித்து பாரதீய ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் பாதிப்பு குறித்து போலீஸ் நிலையங்களில் ஒரே வருடத்தில் 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா? அல்லது பொள்ளாச்சி வேண்டுமா? சிந்தித்து வாக்களியுங்கள்.
தங்களை காப்பாற்றி கொள்வதற்காக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், மாணவ-மாணவிகளின் மருத்துவ கல்விக்கு எதிரான நீட் தேர்வு சட்டம், குடியுரிமை தடை சட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் 23 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையின்றி காத்திருக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசில் மட்டும் 3½ லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே நல்லாட்சி மலர தி.மு.க.கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story